Published on 25/09/2019 | Edited on 25/09/2019
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார். முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் கேரளா சென்றுள்ளார். இரு மாநில முதல்வர்களும் முல்லைப்பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், செய்யாறு உள்ளிட்ட நீர் பங்கீட்டு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழக முதல்வருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் கேரளா சென்றனர்.

கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள மாநில முதல்வரை சந்தித்து நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், இதன் மூலம் இரு மாநில விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.