![tamilnadu chief minister mkstalin caa act](http://image.nakkheeran.in/cdn/farfuture/JRlE_p6JMlYW9ypZLEz8cbtxyFjbDeRwTjQvF6jj-t8/1631070616/sites/default/files/inline-images/cm5555%20%281%29.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்துவருகின்றனர். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுவருகிறார். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தையும் கொண்டுவந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (08/09/2021) காலை இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தீர்மானம் மூலம் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.