Skip to main content

உணவு இல்லாமல் தவிக்கும் சாலையோர மக்கள்... அரசு நடவடிக்கை எடுக்குமா?

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவு மத்தியரசாலும், 144 தடை உத்தரவு மாநில அரசாலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற எந்த தேவைக்கும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனச்சொல்லப்பட்டுள்ளது. 

அதோடு கோயில்கள், சர்ச், மசூதி என அனைத்து வழிப்பாட்டு தலங்களும், மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.
 

tm





திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுமார் 500க்கும் அதிகமான வயதான யாசகர்கள் உள்ளனர். இவர்களுக்கு கிரிவலப்பாதை மற்றும் சில ஆஸ்ரமங்கள் காலை, மதியம் என இலவசமாக உணவு வழங்கி வந்தன. அரசாங்கத்தின் தடை உத்தரவால் கிரிவலப்பாதையில் உள்ள யாசகர்கள் உணவு இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தன்னார்வலர்கள் உணவு வழங்க செல்கிறோம் எனச் சொன்னாலும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள போலீஸார் பலவிதமான கேள்விகளை எழுப்பி, இது பாதுகாப்பற்றது எனச்சொல்லி விரட்டுவதால் அவர்களும் நொந்துப்போய் உள்ளனர். 

இதுப்பற்றிய தகவலை சில தன்னார்வ அமைப்புகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் விளைவாக இப்போது அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் யாசகர்கள் உணவில்லாமல் பட்டினியாக கிரிவலப்பாதையில் படுத்துக்கிடக்கின்றனர்.


 

இவர்களைப்போல் நகரத்தின் பலயிடங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகர்கள் உணவுயில்லாமல் சுற்றி சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை தேவையான உணவை கூட ஏற்பாடு செய்யாமலும், செய்பவர்களையும் தரவிடாமல் தடுக்கிறது காவல்துறை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்