18 முதல் 44 வயதானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் 18+க்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தைத் திருப்பூரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நியூ திருப்பூர் பகுதியில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் நடந்த நிகழ்சசியில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் க. முத்துசாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மே 1ஆம் தேதி அன்று தொடங்கப்பட வேண்டிய திட்டம், மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்காததால் தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.