Published on 18/03/2020 | Edited on 18/03/2020
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியான வெலதிகாமணி பெண்டா மற்றும் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான காந்திநகர் தொட்டி கிணறு, சின்ன கந்திலி உள்ளிட்ட நான்கு இடங்களில், திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறையினர் கரோனா நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

அதோடு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல் வேலூர் காட்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து வரும் வாகங்கள், பயணிகள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.