Skip to main content

ஏற்றுக்கொள்கிறேன்! தமிழிசைதான் அறிவாளி: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
Tamilisai Soundararajan - anbumani 400


தமிழிசைதான் அறிவாளி என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாசுக்கும் டிவிட்டரில் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்களும், பாஜக தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்,

 

 

டாக்டர் ராமதாசை நான் தவறாக குறிப்பிடவே இல்லை. மரங்கள் வெட்டப்படுவது பற்றி டாக்டர் ராமதாஸ் பேசுவதா? என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஆனால் நான் ஜாதியை பற்றி பேசியதாகவும், வன்னியர்களை பற்றி பேசியதாகவும் பொய் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களை திசை திருப்ப நினைக்கின்றனர். சொல்லாத ஒன்றை கூறி, தமிழிசை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார் என போராடுவது சரியல்ல. கருத்துக்கு எதிர் கருத்து தான் சரியாக இருக்கும் என கூறினார்.

எனினும் தமிழிசையின் கருத்துகளை ஏற்காத பா.ம.க, தமிழிசை செளவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை (28.06.2018) பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,

 

 

தமிழிசைதான் அறிவாளி என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மருத்துவ இடத்தை பொதுப்போட்டியில் மெரிட் பிரிவில் பெற்றேன். சிபாரிசு அடிப்படையில் சீட் வாங்கிய தமிழிசைதான் சிறந்த அறிவாளி என கூறியுள்ளார். மேலும், தமிழிசையுடன் விவாதத்திற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்