Published on 06/08/2020 | Edited on 06/08/2020
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனாவிற்கு ஆளான மக்கள் களப்பணியாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். கரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, செங்கல்பட்டு மருத்துவமனையில் டீன் சுகுமாரன் உள்ளிட்ட கரோனாவால் உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.