Published on 13/11/2018 | Edited on 13/11/2018

பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்று திரும்பத்திரும்ப செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை அவர்களிடமே திரும்பத் திரும்ப கேட்டு ஹா..ஹா..என்று சிரித்து மழுப்பினார் நடிகர் ரஜினிகாந்த். இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக ஆபத்தான கட்சிதான் என்கிற நிலையில் பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையே? என்று கேள்வி எழுப்பியபோது, ‘’மத்திய அரசிடம் தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று வருகிறோம். மற்றபடி, எந்த கட்சி நல்ல கட்சி என்று சர்ட்டிபிகேட் கொடுக்க சென்சார் போர்டு கிடையாது’’ என்று நழுவினார்.