Published on 02/10/2019 | Edited on 02/10/2019
தமிழகத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூபாய் 244 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நிரந்த வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
2019- 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது தமிழக சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக நீர் தேக்கம், கால்வாய் அமைத்தல் போன்றவற்றுக்காக 284 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரூபாய் 100 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.