Skip to main content

அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசு வழக்கு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Tamil Nadu government case against enforcement department

 

அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

மணல் குவாரி தொடர்பாக 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “குவாரிகளில் மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் வராது. தனது அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமலாக்கத்துறையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை தலைமைச் செயலக அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்