Skip to main content

அடுத்தடுத்து பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை... மேளதாளத்துடன் வரவேற்பளித்த கிராம மக்கள்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற கல்லூரி மாணவி பங்களாதேஷில் நடைபெற்ற சர்வதேச அளவிலான  பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டார். அங்கு விளையாடி வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு ராமநத்தம் பேருந்து நிலையத்தில் கண்டமத்தான் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மேளதாளத்துடன் மலர் தூவியும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

 

ராமநத்தம்  அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த   விவசாயி வேலு-லெட்சுமி தம்பதியரின் மகள் மீனாட்சி (20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் வேதியியல் 3 ஆண்டு படித்து வருகின்றார். இவர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற  சர்வதேச பெண்கள் கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் கலந்து கொண்டனர். இதில் மீனாட்சியும் ஒருவர்.

 

இவர் கடந்த 27-10-2021 முதல் 30-10-2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பெண்கள் அணியின் கேப்டனாக இருந்து விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார். இப்பொழுது 29-12-2021முதல் 31-12-2021வரை பங்களாதேஷ் டாக்காவில்  நடைபெற்ற சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில்  கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து  கலந்து கொண்ட அனைவரும் மிகவும் ஏழ்மையான  குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர், அரசு சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்