Skip to main content

தமிழ்நாடு மின்சார கேங்மேன் உடல் தகுதி தேர்விலும் முறைகேடா? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

 

தமிழகத்தில் உள்ள மின்வாரியத்தில் 33 ஆயிரம் காலி பணியிடத்திற்கு முதல்கட்டமாக 5 ஆயிம் பேர் கேங்மேன் பதவிக்கு நியமிக்க தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்காக 80 ஆயிரம் பேர் விண்ணபித்திருந்தனர். அதற்கான உடல் தகுதி தேர்வு நவம்பர் 25 தொடங்கி டிடம்பர் 16ல் முடிவடைந்து, அதில் 7500 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

 

55




அடுத்தகட்ட எழுத்து தேர்வுக்கு தாயாராக இருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்த தொழிலார்கள் சங்கம் சார்பாக மாநில பொது செயலாளர் ராஜராஜன் தகுதியில்லாதவர்கள் தகுதி என்று லஞ்சம் வாங்கிக் கொண்டு  நியமித்துள்ளனர் என்று வழக்கு தொடுத்திருந்தார்.
 

அதில் கேங்மேன் பணி நியமனம் பணிகளில் 80 சதவீதம் பேர் தகுதி இல்லாதவர்களே தேர்வு செய்துள்ளனர். அவர்கள் அனைவருமே 5 லட்சத்திற்கும் மேலாக லஞ்சம் வாங்கிக்கொண்டு மின்சாரவாரியம் அதிகாரிகளும், சில தொழில் சங்கங்களும் கூட்டுச்சேர்ந்து கொண்டு இதில் ஈடுபட்டு உள்ளனர் என்று தெறிவித்திருந்ததார். 
 

இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இவ்வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்து செய்துள்ளார். இந்த விசாரனையில் சில கருப்பு ஆடுகள் மாட்டுவார்கள் என தெரியவருகிறது.  


 

 

 

சார்ந்த செய்திகள்