Published on 24/11/2021 | Edited on 24/11/2021

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24/11/2021) காலை 11.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.