Skip to main content

மீனவர்கள் மீது தாக்குதல்; தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

tamil fishermen issues The continuing atrocities of Sri Lankan incident

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் 3 பேரையும் தாக்கியுள்ளனர். மேலும் மீனவர்கள் படகில் வைத்திருந்த திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி உள்ளிட்ட சாதனங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக, நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 அதிநவீன படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்