Published on 04/07/2018 | Edited on 04/07/2018
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஞானா நந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் திருமால் +1 படிக்கும் இவர் உலக சுகாதாரத்தை - தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்ப்ப டுத்தும்விதமாக விழுப்புரம் - மாம்பழ பட்டு சாலையில் இரண்டரை டன் எடையுள்ள ஒருகாரை கயிற்றால் கட்டி அதைதன் பற்களால் கடித்தபடியே 500 மீட்டர் தூரம் இழுத்து சென்று சாதனை செய்துள்ளார் . இது உலக சாதனையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று பேசப்படுகிறது. இந்த நிகழ்வின்போது அவனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை எஸ் பி . ஜெயக்குமார் ஆகியோரி வருகை தந்து மாணவனுக்கு பாராட்டு தெரிவித்தனர் பொதுமக்களும் திரளா வந்து பார்த்து வியந்தனர்.