பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக ஒரு பதிவை வெளியிட்டார். கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக நீக்கவிட்டார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கனிமொழி குறித்து பதிவிட்டார். இதனால் அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச். ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். கண்டனக் குரலை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் பதிவு செய்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி நாளை மாலை 3 மணி அளவில் பாஜக தமிழ்நாடு தலைமையகம் கமலாலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள்.