கோடை இளவரசியான கொடைக்கானலில் வருடம் தோரும் மலர்கண்காட்சி நடைபெறுவது வழக்கம் இப்படி நடக்க கூடிய மலர் கண்காட்சியை அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பது இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால் இந்த ஆண்டு நடைபெறக் கூடிய ஐம்பத்தி ஏழாவது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறரார் என அரசு உத்தரவு வந்ததின் பேரில் கடந்த ஒரு மாதமாகவே மலர் கண்காட்சி நடைபெறும் பூங்கா மற்றும் அதை சுற்றியள்ள ஏரி உள்பட நகர் முழுவதுமே சுத்தம் செய்யப்பட்டு ரோட்டில் பேண்டேஸ் ஒர்க் பார்க்க பட்டதுடன் மட்டுமல்லாமல் கொடைக்கானலில் இருந்து பழனி வரை உள்ள சாலைகளும் சீர் அமைக்கப்பட்டது. அதோடு முதல்வர் தங்குவதற்காக கோகினூர் பங்களா மற்றும் கால்டன் ஹோட்டல் ஆகியவை தயார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் நேற்று இரவு 57வது மலர் கண்காட்சியை தொடக்கி வைப்பதற்காக ஊட்டியிலிருந்து பழனி வழியாக கொடைக்கானல் வந்த முதல்வர் கால்டன் ஹோட்டலில் தங்கினார். ஆனால் இந்த கோடை விழாவில் முதல்வருடன் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால் துணைமுதல்வரான ஓ.பி.எஸ் மட்டும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதுவும் ஓ.பி.எஸ் பெரியகுளம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த போது இந்த கொடைக்கானலும் இத்தொகுதி கட்டுப் பாட்டில் இருந்ததால் ஒபிஎஸ்க்குன்னு ஒருமறியாதை இருந்தது.
அதுபோல் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் பெரும்பாலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இந்த கோடை விழாவிற்கு ஓபிஎஸ் வராதது கட்சிகாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது.. கடந்த சில மாதங்களாகவே இபிஎஸ் அண்ணன் ஓபிஎஸ்சை ஓரம் கட்டி வருகிறார்.
அதுபோல் தற்பொழுது ஏற்காடு, ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியில் ஒபிஎஸ்சை இபிஎஸ் அழைக்கவில்லை. அதுபோல் திண்டுக்கல்லிருந்து தென்மாவட்டத்தில் அண்ணன் ஓபிஎஸ்க்கு தனி செல்வாக்கு இருந்தும் கூட அண்ணன் ஓபிஎஸ்சை இந்த விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ் அனுமதிக்கவில்லை. அதுபோல் அழைப்பிதலிலும் ஓ.பி.எஸ் பெயரை போடக்கூடாது என இபிஎஸ் வெளிப்படையாக சொல்லி இந்த விழாவில் ஓபிஎஸ்சை ஓரம் கட்டி விட்டார் என்று கூறினார்கள்.
Published on 19/05/2018 | Edited on 19/05/2018