வேலூர் மாவட்டம், காட்பாடியின் மையப்பகுதியான சித்தூர் பேருந்து நிலையத்தில் திருமணத்திற்காக சிலர் பேனர் வைத்திருந்தார்கள். அதில் மிகப்பெரிய அளவிலான விளம்பர பலகை திடீரென காற்றில் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அச்சமயம் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பலகை முறிந்து விழுவதைக் கண்டு சுதாகரித்துக் கொண்டதால் பெரும் விபத்து நடக்க இருந்ததில் இருந்து தப்பினர்.
இது போன்ற பெரிய அளவிலான விளம்பர பலகைகள் உரிய அனுமதி பெற்று அதிக பாதுகாப்புடன், மக்களுக்கு பாதிப்பின்றி வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சில காலங்களுக்கு முன்பு இது போன்ற பேனர்களிலிருந்து சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஐ.டி ஊழியர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு சார்பில் அப்பொழுது சாலை ஓரங்களில் பெரிய அளவிலான விளம்பர பதாகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.