
தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நடக்கவிருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவே பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பேசினார்.