சென்னையில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் பெரும்பாண்மையான மாணவர்கள் கிராமபுரங்களில் இருந்து தங்கி பயிலுகின்ற மாணவர்களாகவே உள்ளனர். இந்த மாணவர்கள் சென்னையிலுள்ள எஸ்.சி எஸ்.டி. விடுதியான சைதாப்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், ராயபுரம்,மயிலாப்பூர், வில்லிவாக்கம் என இயங்கிவருகிறது. இந்த அனைத்து விடுதிகளிலும் அரசு விதிபோன்று மெனுவின் படி கொடுப்பதில்லை, காலையில் டீ, காப்பி, இட்லி, தோசை, மாலையில் சுண்டல், தொடங்கி எதுவுமே மாணவர்களுக்கு முறையாக உணவு கிடைப்பதில்லை, மூன்று வேலையும் ஒரே வகையான சாப்பாடு தான் அதுவும் கல்லும், புழுவுமாய் உள்ளது. அதற்கு மேலாக ஒரு படி போய் சாம்பார், சாப்பாடு வடிக்கின்ற கஞ்சி தண்ணீரில்தான் சாம்பாரே செய்யப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மாணவர்கள் கடைகளில் உள்ள சாம்பாரை ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி உணவு சாப்பிடும் நிலையில்தான் உள்ளது. அதைவிட கேவளமான நிலையிலும் மாணவர்கள் உணவை பிச்சை எடுத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. "கற்கை நன்றே கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கே நன்றே" என்பதை போன்று மாணவர்கள் தெருவில் நின்று கொண்டு யாராவது சாப்பாடு கொடுக்க மாட்டராகளா என்பதை போன்று பிச்சையாக உணவை பெரும்நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளது.
இந்த விடுதிகளில் உள்ள அரசி பரப்புகரளை விற்பனைக்களுக்காக திருவள்ளுரிலுள்ள குடோனில் அடைத்துவைத்து ஒட்டுமொத்தமாக ஆந்தராவிற்கு விற்பனை செய்யப்படுகின்றனர். இதற்கு உடந்தையாக ஆதி திராவிடர் அமைச்சர் பி ஏ தான் இதன் ஆணிவேராக இருந்து வருகிறார்.
இது தொடர்பாக பேசிய கோடம்பாக்கம் மாணவர்கள், தினமும் கடைகளில் வாங்கிவந்துதான் சாப்பிடுகிறோம் என்ன செய்யவது சார், காலம் காலமாக எங்களுக்கு இதே நிலைதான் நாங்கள் மெனுபடி சாப்பாடு வழங்கு என்று போராட்டம் செய்தால், போராட்டம் செய்கின்ற நாள் மட்டும்தான் பொங்கலோ, புளீயோதரையோ கொடுகிறார்கள் திரும்பவும் அதே நிலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் படிக்கவா அல்லது தினதோறும் இவர்களோ போராடவா என்ற கேள்வி முன்வைத்தார்.
அவர்களின் கேள்வியும் நியாயமாகவே இருந்தது. இதன் தொடர்பாக விடுதி வார்டன்களிடம் கேட்ட போது "சார் எங்களை எல்லாம் கேட்காதிங்க போய் அமைச்சரையும், இயக்குனரையும் கேளுங்கள் அவர்கள்தான் இப்படி போட சொல்லுறாங்க சார் நீங்க என்ன செய்தி வேண்டுமானாலும் போட்டுகோங்க எங்களை ஒன்றுமே செய்யமுடியாது. அத்தனை பேரும் திருடர்கள் தான்" என்றார்.