ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பொம்மனட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் திவ்யபாரதி (18). திவ்யபாரதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற திவ்யபாரதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் மகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவரது பெற்றோர் மகளை மீட்டு தரக்கோரி கவுந்தபாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைப்போல் கோபி அடுத்த கோமாளிக்கரை, கலி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் அபிராமி (26) இவருக்கும் அயலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் கணவன் மனைவி இருவரும் காமராஜ் நகரில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அதை கம்பெனியில் வேலை பார்த்த ஒருவருடன் அபிராமிக்கு பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிராமி அவரது தந்தை வீட்டில் கடந்த 20 நாட்களாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சொல்வதாக அபிராமி கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.