Published on 17/12/2020 | Edited on 17/12/2020

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில், மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ஜனசதாப்தி ரயிலை மறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜனசதாப்தி விரைவு ரயில் 15 நிமிடம் கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பிறகு புறப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.