Skip to main content

பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் கொள்ளிடத்தில் போராட்டம்

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்



பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென டெல்டா நீர் ஆதார மையத்தினரோடு பொதுமக்களும் ஜமாத்தார்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தபடியே இருக்கிறது. 45 கிராமங்களில் சீர்காழி தாலுக்காவில் மட்டும் 18 கிராமங்களில் அறிவித்துள்ளனர்.

பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தின் ஆபத்தை மக்களுக்கு எடுத்து கூறும் விதமாக டெல்டா நீர் ஆதார அறக்கட்டளையின் தலைவர் கிள்ளை ரவீந்தரன் ஒவ்வொரு கிராமமாக மக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுப்பதும், மக்களிடம் ஆபத்துக்குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தியும் வருகிறார். அவருக்கு ஆதரவாக சீர்காழி தாலுக்கா பொதுமக்களும், இளைஞர்களும் முன்வருகின்றனர். பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என சீர்காழி தாலுக்கா அலுவலகம் முன் முதற்கட்ட பெருந்திரல் போராட்டத்தை நடத்தினார். அந்த பொராட்டத்திற்கு பிறகு அடுத்தடுத்த போராட்டம் நடந்துவருகிறது.

இந்த நிலையில் கொள்ளிடம் தைக்கால், துளசேந்திரபுரம் ஜாமாத்தார்களிடம் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தின் பாதிப்புக்குறித்து பேசி விழிப்புனர்வை ஏற்படுத்தினார் கிள்ளை ரவீந்திரன். அதனை தொடர்ந்து இன்று பொதுமக்கள், இஸ்லாமிய ஜமாத்தார்கள் என அனைவரும் பள்ளிவாசல் முன்பு திறண்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

க.செல்வகுமார்.

சார்ந்த செய்திகள்