தங்களின் சுடுகாட்டு நிலத்தை அழித்து விட்டு ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. மூலம் ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தார்கள்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரியசேமூர், சின்னசேமூர்,எலந்தகாடு, கல்லாங்காடு, அம்மன்நகர், கன்னிமார்நகர், சின்னக்குளம் போன்றடபகுதிகளை சேர்ந்த மக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இந்த நிலத்தில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக சுடுகாடு நிலத்தை முழுமையாக சமன் செய்து வருகின்றது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பததோடு சுடுகாட்டினை அழிப்பதற்கு பதிலாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் சென்ற கிராம மக்கள், சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இக்கோரிக்கை தொடர்பாக பெரியசேமூர் பகுதி மக்கள் ஏராளமானோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் ஈரோடு மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ வும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தனது சுயநலத்துக்காக எங்கள் சுடுகாட்டை அழித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இங்கு செயல்படுத்த உறுதி செய்துள்ளார். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆகவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இங்கு கொண்டு வரக்கூடாது. மீறி செயல்பட்டால் பல கட்ட போராட்டத்தை நடத்துவோம் என கூறியுள்ளார்கள்.