Skip to main content

நெசவாளர்கள் பூட்டு போட்டு போராட்டம்

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
Struggle


 

புதுச்சேரியில் நெசவுத்தொழில் செய்யும் நெசவாளர்  கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பல மாதங்களாக பாவு நூல் கொடுக்கப்படவில்லை என புகார் கூறுகின்றனர். மேலும் நெசவு செய்த துணிகளுக்கு இரண்டு மடங்கு கூலி வழங்க வேண்டும் என்றும்,  இரண்டு மாதமாக கூலி வழங்கப்படவில்லையென்றும் கூறுகின்றனர். 
 

 

 

அதையடுத்து பாவு நூல்  வழங்க கோரியும், நிலுவையிலுள்ள 2 மாத கூலி வழங்காததை கண்டித்தும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்க  தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள் அலுவலக கேட்டிற்கு  பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதில் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை  சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  
 

 

 

உடனடியாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில்  அடுத்த கட்டமாக  தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். 
 

 


 

சார்ந்த செய்திகள்