Published on 17/05/2020 | Edited on 17/05/2020
வங்க கடலில் உம்பன் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மிக அதி தீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு உம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி இந்த புயல் மேற்குவங்கம் மற்றும் ஒரிசா கடல்பகுதியை கடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்றப்பட்டுள்ளது.