Published on 18/06/2018 | Edited on 18/06/2018
ஸ்டெர்லைட் ஆலையில் கிடங்கில் கந்தக அமிலம் கசிவதாக ஏற்பட்ட புகாரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் பல்வேறு கெமிக்கல் கன்டைனர்கள் உள்ளன. அதில் கந்தக அமிலம் நிரப்பட்டிருந்த கன்டைனரில் சிறிய கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. இதை அடுத்து உதவி மாவட்ட ஆட்சியர் பிரசாத் தலைமையிலான குழு மற்றும் துறை நிபுணர்கள் ஆலையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கந்தக அமில கசிவு இன்று சரிசெய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மேலும் இந்த கந்தக அமில கசிவு பற்றி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.