ஸ்டெர்லைட் ஆலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க நாளை கமல்ஹாசன் தூத்துக்குடி செல்ல உள்ள நிலையில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், 2 நாட்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரிய அமைக்கும் விவகாரத்தில் குரல் கொடுத்த ரஜினிகாந்த் தற்போது ஸ்டெர்லைட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.