புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் உள்ளது பேரையூர் கிராமம். பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ள பேரையூரில் நாகநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதகளில் இருந்தும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள். கல் நாக சிலைகளை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக கொடுப்பதே பக்தர்களின் வழக்கம். இப்படி கொடுக்கப்பட்ட சிலைகள் மட்டுமே லட்சக்கணக்கில் குவித்து வைகப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கு அருகில் இரு கன்மாய்களுக்கு மத்தியில் முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நின்ற வாகை மரத்தை சில தொழிலாளர்கள் வெட்டிக் கொண்டிருந்தனர். மரத்தின் வேர்களை வெட்டி அகற்ற மரத்தின் டியில் மண்ணை தோண்டிய போது கல்லில் ஆயுதம் மோதுவது போல சத்தம் வர மேலும் தோண்டியபோது ஐம்பொன் சிலை வெளிப்பட்டது.
தொடர்ந்து தோண்டிய போது ஏராளமான ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டது. அதன் பிறகு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் திரண்டு பொக்கலின் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியில் மண்ணை தோண்ட தோண்ட முருகன், அம்மன் என்று மதியம் 3.30 வரை 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இயந்திரம் மூலம் தோண்டுவதால் பல சிலைகள் சேதமடைந்து வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடர்கிறது. மேலும் பல சிலைகள கிடைக்கலாம் என்கின்றனர். தோண்டி எடுக்கப்படும் சிலைகள் விலை உயர்ந்த பழமையான சிலைகள் என்பதால் போதிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.