Published on 13/10/2018 | Edited on 13/10/2018

வயல்காட்டில் போடப்பட்டிருந்த மின்வேலியில் கூலிவேலை செய்யவந்த தம்பதியினர் சிக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகேயுள்ளது துத்திப்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாண்டவமூர்த்தி (65) இவரது மனைவி விட்டோபாய் (55) ஆகிய இருவரும் வயல் வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி இறந்துள்ளனர்.
இந்த செய்தி அக்கிராம மக்களை பதட்டமடைய செய்துள்ள நிலையில் யார் அந்த மின்சார வேலி அமைத்தது எதற்காக போடப்பட்டது உட்பட இது சம்பந்தமாக அனந்தபுரம் போலீசார் தீவிரவிசாரணை செய்து வருகிறார்கள்.