மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் தம்பி கே. ராதாகிருஷ்ணன் (வயது 66). இவர் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட திடல்வெளி பகுதியில் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (09.07.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கே. பாலகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
மேலும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். குணசேகரன் கே சாமுவேல்ராஜ், விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி, சிபிஎம் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், விழுப்புரம் சுப்பிரமணியன், நாகப்பட்டினம் மாரிமுத்து, மயிலாடுதுறை சீனிவாசன், திருவாரூர் சுந்தரமூர்த்தி, கள்ளக்குறிச்சி ஜெய்சங்கர், மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநில குழு உறுப்பினர் சுகந்தி. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு, கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் உதயகுமார் மருதவாணன் ராமச்சந்திரன் திருவரசு சுப்புராயன் ராஜேஷ் கண்ணன், தேன்மொழி ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்தனர்.
அதே போன்று திமுக முன்னாள் எம்எல்ஏ சரவணன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழக பொருளாளர் கதிரவன், கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, உள்ளிட்ட கட்சியினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கட்சியினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், மாவட்ட செயலாளர் அரங்க. தமிழ் ஒளி, மேற்கு மாவட்ட செயலாளர் மணவாளன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, செல்லப்பன் ஆகியோர் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்தனர்.
மேலும் தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவை தலைவர் பாலு, துணை செயலாளர் பானுச்சந்தர், பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.த அருள்மொழி, விவசாய அணி மாநில துணை செயலாளர் சஞ்சீவி, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் வட்ட செயலாளர் தமிம்முன் அன்சாரி, மாவட்ட துணை செயலாளர் சேகர், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட கட்சியினர், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிம்முன் அன்சாரி, மாநில துணை செயலாளர்கள் நெய்வேலி இப்ராகிம், அமித் ஜாபர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ வி சிங்காரவேல். உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மாலையில் அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.