தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய தேர் நெல்லையப்பர் கோவில் தேர் ஆகும். இந்த தேர் சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நெல்லையப்பர் கோவிலின் ஆனி மாதம் தேரோட்ட திருவிழா 10நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 8- ஆம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா வருதல் நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சி, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.
நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 08.50 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றன. நெல்லையப்பர் கோவில் நான்கு ரத வீதிகளிலும் பெண்கள் வண்ண கோலமிட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்மனை வரவேற்றனர். இந்த தேர் சுமார் 450 டன் எடை கொண்டது. அதே போல் இந்த தேர் லண்டன் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டது. உலகில் மிகவும் பழமை வாய்ந்த தேரோட்டமாக உள்ள நெல்லையப்பர் தேரோட்டம் 1505 ஆம் ஆண்டு முதல் தொடங்கி, 515 ஆண்டுகள் எந்தவித தடையும் இன்றி தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் முழுக்க முழுக்க மனிதர்களால் இயக்கப்படும் தேரோட்டம் ஆகும். கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் சிசிடிவி கேமராக்கள், ஆளில்லா குட்டி விமானம் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றன.