Published on 01/12/2022 | Edited on 01/12/2022
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய நலத்திட்ட உதவிகளைத் துவங்கி வைத்தார். அப்போது மகப்பேறு கட்டடத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு லிப்ட் வழியாக மேற்தளத்திற்குச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் நடுவழியில் நின்றது. இதனால் அவசர வழி வாயிலாக அமைச்சர் மீட்கப்பட்டார். இந்த விவகாரம் அப்போதே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின்தூக்கிகளைச் சரியாகப் பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.