Published on 25/05/2019 | Edited on 25/05/2019
புதுச்சேரி சிறப்பு காவல் பிரிவிற்கு மேலை நகரங்களில் விற்பனை செய்யப்படும் ரசாயன ஸ்டாம்ப் போதைப் பொருள் புதுச்சேரியின் நகர பகுதிகளில் விற்பனை செயப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகையில் புதுச்சேரி லாஸ்பேட்டை வள்ளலார் நகர் பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சென்று வருவது அறியப்பட்டு அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறும்போது இந்த ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள் தடை செய்யப்பட்டது என்றும், இதன் மதிப்பு அதிகம் என்பதால் வெளி மாநில மற்றும் வெளிநாட்டினர் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், இதன் போதையானது 8 மணி முதல் 12 மணிவரை இருப்பதால் இது கொஹைன் , அபினை விட அதிக வீரியமானது என்றும் தெரிவித்தனர்.