மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்த
பு.த. கட்சியினர்!
“புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பிரச்சனைகளை திசை திருப்புகின்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருந்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிருஷ்ணசாமி உருவ பொம்மை எரிப்பு, ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
சிவகாசியில் புதிய தமிழகம் கட்சியினர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் படங்களை எரித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலும் புதிய தமிழகம் கட்சியினர், மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து, சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
-சி.என்.இராமகிருஷ்ணன்