கோவை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்,
நாளை மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும். காவேரி டெல்ட்டா பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாளை மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும்.
மத்திய அரசியின் வருமான துறை அனைவரையும் கண்காணித்து வரி எய்ப்பு செய்பவர்களை கண்டுபிடித்து வருமான வரியை வசூலிப்பதுதான் நடவடிக்கை. திமுக ஆட்சியில்தான் ஒருவருக்கே எட்டு டெண்டர், பத்து டெண்டர் என கொடுக்கப்பட்டிக்கும் ஆனால் எங்கள் ஆட்சியில் அப்படி இல்லை. துரைமுருகன் பொதுப்பணிதுறை அமைச்சராக இருந்தபொழுது கட்டடப்பிரிவில் மட்டும் ஒரே ஆளுக்கு 3 டெண்டர் கொடுத்துள்ளார் எனறால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது டெண்டர் பற்றி வரும் விமர்சனங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.
எட்டுவழி சாலைக்கு 85 சதவிகிதம் நிலம் எடுக்கும்பணி நடைபெற்றுவிட்டது. சில விவசாயிகள் மட்டும் மாற்று கருத்து தெரிவிப்பதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
காவேரி நீர்கேட்டு போராடி வந்த சூழலை மாற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டது. மேலும் இயற்கையே ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு நீரை பெற்றுத்தந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் என்னைக்கு ஸ்டாலின் லண்டன் போனாரோ அன்று மழை பிடித்தது அவர் வருவதற்குள் அணையே நிரம்பிவிட்டது. மேட்டூர் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளும் நிரம்பிவிட்டன. இன்னைக்கு தமிழகத்திற்கு வந்திறங்கினார் மழை நின்றுவிட்டது எனக்கூறினார்.