Skip to main content

பசியால் வதைபடும் விலங்களுக்கும் உணவு படைப்பு... போற்றப்படும் மனிதம்!

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

செங்கோட்டை அருகே உள்ள குற்றாலம் ஐந்தருவி வல்லம் பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான குரங்குகள் உள்ளன. இந்த பகுதிகள் தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்கி வருகின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பழங்கள் உணவு பொட்டலங்கள் தண்ணீர் உள்ளிட்ட உணவு பொருட்களை கொடுப்பது வழக்கம் இந்த உணவு பொருட்களை கொண்டு குரங்குகள் தங்கள் பசியை போக்கிவந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததாலும் கரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கைக்காகவும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், இங்கு சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் யாரும் வராத நிலையில் இங்குள்ள குரங்குகள் உணவின்றி தவித்து வருகிறது.

 

Food for the hungry animals...


ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க போதிய வசதிகளை அரசு செய்துள்ளது இதனால் மக்கள் சிரமமின்றி உணவு வகைகளை சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் இந்த பகுதி குரங்குகள் தற்போது உணவின்றி தவித்து வருகிறது இதனை கண்ட செங்கோட்டையை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவரும் தி.மு.க. நகர செயலாளருமான ரஹீம் குரங்குகளுக்கு தினம் உணவாக பிரட் தண்ணீர் வழங்கி வருகிறார். மனிதாபிமானமிக்க இந்த செயலை விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் இந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்