திருக்குவளை கிராமத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த வீட்டில் அவரது திரு உருவ படத்திற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரோடு உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, பொன்முடி, கே.என். நேரு, உள்ளிட்டவர்களும் வந்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை என்னும் சிறு கிராமமே திமுக தலைவர் கலைஞரின் சோந்த ஊர். கலைஞர் உடல்நலம் நல்படியாக இருக்கும் போது திருவாரூர் பகுதிக்கு வந்துவிட்டால் சொந்த கிராமமான திருக்குவளைக்கும், அவரது தாயார் நினைவிடமான காட்டூருக்கும், சன்னதி தெருவில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கும் செல்லாமல் இருந்ததே இல்லை.
கடந்த 7 ம் தேதி உடல்நலம் குறைபாடினாலும், வயோதிக காரனத்தினாலும் கலைஞர் காலமானார். அவரது இறப்பு செய்திகேட்டு திருக்குவளை, திருவாரூர், காட்டூர் பகுதி மக்கள் அன்னம் தண்ணீர் அறுந்தாமல் துக்கம் அனுசரித்தனர். கலைஞருக்காக ஒவ்வொரு கிராமத்திலும் புகழஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடந்துவருகிறது. அதில் ஒரு நிகழ்வாக திருச்சியில் நடந்த விழாவில் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு புகழஞ்சலி செய்தனர். அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்,பி,கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இன்று காலை கார் மூலம் மன்னார்குடி வழியாக திருக்குவளைக்கு வந்தனர்.
திருக்குவளையில் உள்ள அவரது பாட்டியார் அஞ்சுகத்தம்மையார் படத்திற்கு மாலை அனிவித்தனர். அதோடு தாங்கள் கொண்டுவந்த கலைஞரின் திருஉறுவப்படத்தை வைத்து மறியாதை செய்தனர். பிறகு வீட்டிற்கு பின்னால் உள்ள கொள்ளையில் சிறிது நேரம் சோகமா அமர்ந்தபடியே சிலரிடம் பேசிவிட்டு. திருவாரூர் சன்னதித்தெருவில் உள்ள வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு மதிய உணவு முடித்துக்கொண்டு காட்டூரில் உள்ள பாட்டியாரின் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு மதுரையில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறார்.
கலைஞரைப் போலவே திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் சொந்த மண்ணை மறக்காமல் கலைஞர் பின்பற்றியது போலவே நடந்து கொண்டதை கண்ட திருவாரூர், திருக்குவளை மக்கள் நாங்கள் இனி அனாதைகள் இல்லையென மகிழ்ந்தனர்.