Skip to main content

திருவாரூரில் பத்து கோடி கேட்டு கடத்தப்பட்ட  ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு 

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
neethi

 

 திருவாரூரில் ரூ10 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டார். போலீஸ் வருவதை முன்கூட்டியே தகவலறிந்த கடத்தல்காரர்கள் தலைமறைவாகினர்.

 

திருவாரூரில் கிருஷ்ணா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நீதிமோகன் கடந்த 8 ம் தேதி இருசக்கர வானத்தில் சென்றபோது காரில் வந்த மர்மநபர்கள் கடத்தி சென்றனர். அதன் பின்னர் அவரை விடுவிக்க ரூ10 கோடி கேட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நீதிமோகன் அலுவலகத்தின் உதவியாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட நீதிமோகனை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் நீதிமோகன் மாத தவனை திட்டத்தில் நிலம் வழங்குவதாக பலரை மோசடி செய்த பல்வேறு வழக்கு அவர் மீது உள்ளது. இதனையடுத்து  போலீசார் பாதிக்கபட்டவர்கள் யாரேனும் கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மன்னார்குடியை சோ்ந்த வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது போலீசாருக்கு தெரியவந்தது. 

 

இதனையடுத்து வெங்கடாசலம் அளித்த தகவலின் பேரில் உடனடியாக திருவாரூரிலில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இதனிடையே கடத்தல்காரர்களுக்கு போலீசார் இருப்பிடத்தை கண்டுபிடித்து தேடி வருவதை அறிந்து நீதிமோகனை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

அதன் பிறகு கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

 

திருவாரூர் அழைத்த வரப்பட்ட நீதிமோகனுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் விசாரணையை தீவிர படுத்த முடியாமல் உள்ளனர்.  

 

 இந்நிலையில் வெங்கடாசலம் மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள அலெக்ஸின் தம்பி ஜான் கென்னடி இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கடத்தல்காரர்கள் 4 பேரை பிடிக்கும் முயற்சியில் தனிபடை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்