Published on 26/05/2019 | Edited on 26/05/2019
இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல; அனைத்து தேசிய இனங்களையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’கர்நாடகம், குஜராத், ஒரிசா, மே.வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? கிணற்றுத் தவளை’’என்று விமர்சித்துள்ளார்.

இதற்கு சுப.வீரபாண்டியன் பதிலடி கொடுக்கும் விதமாக சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’கிணற்றுத் தவளை 37 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. "உலகத் தவளை "யோ, கட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றதையே பெரும் வெற்றியாய்க் கருதுகிறது. ஐயோ பாவம்’’என்று பதிவிட்டுள்ளார்.
