Skip to main content

குடிநீர் பராமரிப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய கோவை மாநகராட்சியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
dmk


கோவை நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான அனுமதியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறி கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு கோவை மக்களின் கனவு திட்டமான 24 மணி நேர குடிநீர் சேவைக்கான பராமரிப்பு பணிகளை 26 ஆண்டு காலத்திற்கு ரூ.3ஆயிரத்து 150 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது கண்டனத்துக்கு உரியது என்றும், மத்திய அரசின் நிதி உதவி பெற்று மாநில அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி என அரசு நிறுவனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்தாமல் வரலாற்றில் இல்லாதவாறு தனியார் மூலம் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்துவது ஏற்க முடியாது என்றனர்.
 

dmk


சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், முறையாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்வதாகவும், திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெளிவாக வெளியிட தயங்குவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்