தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக் கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் தொடங்கி, 2 கட்டங்களாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகளும் கட்சி உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி கடந்த 28ஆம் தேதி திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை தொடர்ந்ததன் மூலம் முதலமைச்சர் பழனிச்சாமி, திமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டுமென எந்த இடத்திலும் திமுக கூறவில்லை; உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி முறையாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றம் சென்றோம்” என்று தெரிவித்துள்ளார்.