Skip to main content

பணியாளர்கள் பாஸ் பெறுவதற்கான வரைமுறை- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Published on 03/05/2020 | Edited on 04/05/2020

 

 Staff Passport Scheme - chennai Corporation Announcement

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்துள்ளது.
 

இந்நிலையில் சென்னையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு பட்டியலிட்டு இருந்தது. தற்போது சென்னையில் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், வீட்டுவேலை பணியாளர்கள் பாஸ் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், வரைமுறைகள் சென்னை மாநகராட்சி சார்பில்  வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி  http://tnepass.tnega.org என்ற இணையத்தளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணியாளர்களும் மேற்கண்ட இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளும், ஐடி நிறுவனங்களும் http://tnepass.tnega.org என்ற இணையத்தளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம்.

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் கிராமப்புறத்  தொழில்கள் மற்றும் கிராமப்புற, தனி கடைகளுக்கு அனுமதி தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்