Skip to main content

 120 நாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சி – கொண்டாடும் மாணவ, மாணவிகள்

Published on 17/02/2019 | Edited on 17/02/2019
st

 

பிப்ரவரி 14ந்தேதி முதல் 2019 ரிவேரா நிகழ்ச்சி விஐடி பல்கலைக்கழகத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சர்வதேச கலை விழாவில் இன்பியூசன் என்கிற நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உணவு முறையை பறை சாற்றும் வகையில் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் இசைக்கேற்ப ஆடல் பாடல்களுக்கு நடனமாடினர்.

 

st


இதில் இலங்கை, நேபாளம், பிலிப்பையன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், மலேசியா, வங்கதேசம், மாலத்தீவு, கென்யா, எத்திதோப்பியா நாடுகளிலிருந்து வந்திருந்த கலைர்கள் பாரம்பரியம் மற்றும் ஜனரஞ்சகமாக நடனமாடி பரவசப்படுத்தினர். சீனா, கம்போடியா, இத்தாலி, பிரான்ஸ், லித்துவேனியா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஓமன் நாட்டு இசைக்கருவிகளை இசைத்து ஆடல்பாடல்களை நிகழ்த்தினர்.

 

st


இந்தியாவிலிருந்து கேரளா, தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, இறைவழிபாடு உள்ளிட்டவைகளை ஆடல்பாடல்கள் மூலம் இந்திய கலைஞர்கள் நிகழ்த்திக்காட்டினர்.

 

st


இந்த நிகழ்ச்சிக்கு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேஹல்சுடாசாம நடுவராக இருந்து சிறந்த கலை நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்தார். அவரோடு தெலுங்கு சினிமா நடிகர்களான மஞ்சுமனோகர், ஆட்டோ சீனு, ராம்பிரசாத் பங்கேற்று காமெடி நிகழ்ச்சி நடத்தினர். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் குழுவினர் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி சினிமா பாடல்களை பாடினார். நாளை பிப்ரவரி 17ந்தேதி நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துக்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 

சார்ந்த செய்திகள்