Skip to main content

அணிலால் மின்தடை... அமைச்சரின் பதிலுக்கு சமூகவலைதளத்தில் குவியும் எதிர்ப்பும் ஆதரவும் ! 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response!

 

அணில்களால் மின் தடை ஏற்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது  கடும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

“தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு முடியும்வரை மின் தடை இருக்காது. இதனால் மின் பராமரிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன” என அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் மின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் காற்றாலை மின்சார உற்பத்தி இருந்தும் ஏன் மின்தடை ஏற்படுகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response!

 

அதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளன. இதனை முதலில் அமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் அண்மையில் மின்தடைகள் குறித்து புகார்கள் குவிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அணில்கள் மின்கம்பியில் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார். ''சில இடங்களில் செடிகள் வளர்ந்து  லைனில் படும்போது அதில் அணில் ஓடுகிறது. அப்படி ஓடும்போது அந்த இரண்டும் லைனும் ஒன்றாகி மின்தடை ஏற்படுகிறது'' எனக் கூறியிருந்தார்.

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response

 

அமைச்சரின் இந்த பதிலுக்கு பலர் எதிர்வினையாற்றிவருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுவருகின்றன. அணில் படங்களை வைத்து கேலியாக  செந்தில் பாலாஜியின் கருத்துக்கு எதிராக மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அதே சமயம் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாகவும் சிலர் மின் கம்பிகளுக்கு அணிலால் ஏற்படும் பாதிப்பு குறித்து செய்திகள், புகைப்படங்கள், கட்டுரைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response

 

இந்நிலையில், விமர்சனத்தைப் பெற்ற இந்தக் கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ''கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசுகின்றன. அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதால்கூட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாக சொன்னேன்'' என மின்கம்பியில் அணில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்