மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசு நீட் தேர்வை ஆதரிப்பது அநீதியானது: நல்லகண்ணு பேட்டி
மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசு நீட் தேர்வை ஆதரிப்பது அநீதியானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நீட் தேர்வை கண்டித்து அனிதா இறந்திருக்கிறார். அதிலிருந்து போராட்டங்கள் தொடர்கிறது.. திருச்சியில் தினேஷ் தலைமையில் எட்டாவது நாளாக உண்ணாவிரதம் தொடருகிறது. எதிர்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் தொடரும் எனவும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றியை தெரிவித்து கொள்கிறது.
முற்போக்கு வாதிகள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களிடம் நேர்மை எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டினுடைய இட ஒதுக்கீட்டு கொள்கையை எதிர்த்து நீட் வைத்திருப்பது, மாநில அரசு மத்திய அரசோடு சேர்ந்து நீட் தேர்வை ஆதரிப்பது அநீதியானது. இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது.
- ஜெ.டி.ஆர்