Skip to main content

சென்னையில் நாளை சிறப்பு மெட்ரோ ரயில் சேவை

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Special Metro train service in Chennai tomorrow

 

சென்னையில் நாளை அதிகாலை நடைபெறும் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களின் வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் நாளை (06.08.2023) காலை 04.00 மணி முதல் 11.00 மணி வரை, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் 1063 திருநங்கைகள் உட்பட 75,000 பேர் பங்கேற்கும் 'கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் - 2023' என்ற மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொண்டு பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 பிரிவுகளின் கீழ் 10.70 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்க உள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க உள்ளார்.

 

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, இதில் பங்கேற்பவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கும், சிறுமலையில் 3.50 மணிக்கும், கிண்டியில் 3.55 மணிக்கும். விமான நிலையத்தில் 4.00 மணிக்கும் கிளம்பும் மெட்ரோ ரயில், அரசினர் தோட்டம் சென்றடையும் வகையிலும், பரங்கிமலையில் இருந்து 4.00 மணிக்கு புறப்படும் மெட்ரொ ரயில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் சென்றடையும் வகையிலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  4.00 மணிக்கு புறப்படும் மெட்ரொ ரயில் பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்