Skip to main content

என்.எல்.சிக்கு ஆதரவு பேச்சு; அமைச்சர் எம்.சி.சம்பத்தின் கொடும்பாவி எரித்து கிராம மக்கள் போராட்டம்!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

 

 Speaking in favor of NLC, Minister M.Sampath; villagers scramble!

 

என்.எல்.சி நிறுவன மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு விருத்தாசலம், புவனகிரி தாலுக்காக்களில் 40 கிராமங்களின் விளை நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தால், பாதிக்கப்படும் கிராமங்களில் தொடர் போரட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 

 Speaking in favor of NLC, Minister M.Sampath; villagers scramble!

 

இந்நிலையில் தமிழக  தொழில்துறை அமைச்சர் எம்.சி .சம்பத் சில நாட்களுக்கு முன்பு என்.எல்.சி நிறுவனதிற்கு ஆதரவாக பேசியதால்,  பாதிக்கப்பட்ட  மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர்,  அதிமுகவின் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

 

மேலும்  வருகின்ற தேர்தலில், அதிமுகவினர் 40 கிராமங்களில் நுழைய முடியாது என்று கூறி  முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில்  பதற்றம் நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்