ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இதுகுளித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பேரழிவு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்க்கிறேன். உடன் நிரந்தரமாக ஆலையை மூடுவதற்கு உத்திரவிட்டு போராட்டக்காரர்களோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டு அமைதி நடவடிக்கைகளை அவசரக்கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.
பேரழிவை ஆய்வு பூர்வமாக ஏற்றுக்கொண்ட அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்திற்கு மதிப்பளிக்க தவறியதும், காவல்துறை மூலம் அடக்கு முறையை கையாண்டுதுமே கலவரத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.
அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் வாழ்வதற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.ஸ்ரீவைகுண்டம் ஏரியிலிருந்து தண்ணீர் வழங்குவதை காலத்தில் தடை விதித்திருக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறை மக்களுக்கு தொடர்ந்து கோபத்தை ஏற்படுத்தி வந்தது. ஆலை நிர்வாத்தினரோடு சேர்ந்துக் கொண்டு மக்களை பிளவுபடுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இக்கலவரத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி அமைதி காக்க வேண்டும் என வேண்டுகிறேன். இவ்வாறு கூறினார்.