திருச்சியில் தண்டவாளங்கள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தென்மாவட்ட ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
திருச்சியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் தண்டவாளங்கள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சுமார் 5 மணி நேரங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இந்த பணிகளால் திருச்சி ஜங்ஷன் ரயில் நியைத்திற்குள் ஒவ்வொரு ரயில்களாக அனுமதிக்கப்படுகின்றன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. பொதிகை, பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மேலும் திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி ஜங்சன் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11.35 மணிக்கு பதிலாக 12.15 மணிக்கு புறப்படும் எனவும், அதே போன்று திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி ஜங்சன் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11.35 மணிக்கு பதிலாக 12.15 மணிக்கு புறப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.